ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ் 314.02 புள்ளிகள் உயர்ந்து 81,101.32 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 95.45 புள்ளிகள் உயர்ந்து 24,868.60 ஆக உயர்ந்து நிலைபெற்றது.
Indian stock market rebounds with strong gains - கோப்புப் படம்
Indian stock market rebounds with strong gains - கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: இந்த மாத இறுதியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் வெகுவாக எதிரொலித்ததும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி பங்குகள் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து, இன்றைய பங்குச் சந்தையில், சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்ந்ததும், நிஃப்டி 24,800 க்கு மேல் சென்று நிறைவடைந்தது.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 314.02 புள்ளிகள் உயர்ந்து 81,101.32 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 95.45 புள்ளிகள் உயர்ந்து 24,868.60 ஆக உயர்ந்து நிலைபெற்றதால், தொடர்ந்து ஐந்தாவது நாளாக முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்தனர்.

இன்றைய வர்த்தகத்தில் 3,106 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,483 பங்குகள் உயர்ந்தும் 1,514 பங்குகள் சரிந்தும் 109 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமானது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், செப்டம்பர் 11 ஆம் தேதி பங்குகளை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை அதன் வாரியம் பரிசீலிக்கும் என்று கூறியதையடுத்து, இன்ஃபோசிஸ் 5.03 சதவிகிதம் வரை உயர்ந்தது முடிந்தது.

சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை உயர்ந்த நிலையில் டிரென்ட், எடர்னல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் என்.டி.பி.சி ஆகியவை சரிந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமானது. நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

செப்டம்பர் 11 அன் இன்ஃபோசிஸ் அதன் வாரியம் பங்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஐடி பங்குகளில் ஏற்பட்ட வலிமையால் முதலீட்டாளர்கள் வெகுவாக உற்சாகமடைந்ததால் சந்தை உயர்ந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,170.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,014.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.80 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 66.55 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: எஃப்எம்சிஜி-யில் நுழையும் உஷா ஸ்ரீராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com