
நேற்று பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(செவ்வாய்க்கிழமை) பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,129.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 227.18 புள்ளிகள் அதிகரித்து 227.18 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71.30 புள்ளிகள் உயர்ந்து 24,844.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி குறைப்பு இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஆட்டோமொபைல் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.
இன்று நிஃப்டி ஐடி பங்குகள் இன்று 2% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. அதேபோல வங்கித் துறை பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள் 0.5% சரிந்துள்ளது.
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகளில் பெரிய தாக்கம் எதுவும் இல்லை.
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
டைட்டன் கம்பெனி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிரென்ட், பஜாஜ் ஆட்டோ, எடர்னல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.