
விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.
முழுக்க முழுக்க கேமிங் பிரியர்களைக் கவரும் வகையிலான சிறப்பம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவிலுள்ள கேம் பிரியர்களைக் கவரும் வகையில் விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
விவோ டி4 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன், 12GB உள் நினைவகம் 256GB நினைவகம் கொண்டது.
6.67 அங்குல அமோலிட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. முழுக்க ஹெச்டி தரத்தில் 2800×1260 திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 5000 nits திறன் உடையது.
மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ 4nm புராசஸர் கொண்டது.
கேம் விளையாடும்போது வெப்பமாவதைக் குறைக்கும் வகையில், கூலிங் சேம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ. 38,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்ன பிற ஸ்மார்ட்போன்களும் கேம் பிரியர்களுக்கு உகந்தவையாக உள்ளன.
அவையாவன, ஓப்போ ரெனோ 14 5ஜி, விவோ வி 60 5ஜி, நத்திங் 3ஏ ப்ரோ 5ஜி, ரியல்மி ஜிடி 7 போன்றவை கேம் பிரியர்களுக்கு உகந்தவை.
இதையும் படிக்க | ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.