
கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனை ரூ. 40 ஆயிரத்துக்கு ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பெறலாம்.
கடந்த ஆண்டு கூகுள் பிக்சல் 9 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத சலுகை விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
இதேபோன்று கூகுள் பிக்சல் 9 ஏ ஸ்மார்ட்போனும் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானபோது இதன் விலை ரூ. 79,999. ஆனால், தற்போது பிக்சல் 10 அறிமுகமாகவுள்ளதால், பிக்சல் 9 ஸ்மார்ட்போன் விலை குறைந்துள்ளது.
தயாரிக்கப்பட்ட பிக்சல் 9 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து தீர்க்கும் நோக்கத்தில் இந்த சலுகை ஃபிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் கூகுள் பிக்சல் 9 விலை தற்போது ரூ. 64,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எச்.டி.எஃப்.சி. வங்கி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஃபிளிப்கார்ட் எஸ்பிஐ கடன் அட்டை, ஆக்சிஸ் வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ. 4,000 வரை தள்ளுபடி உண்டு.
ஃபிளிப்கார்ட் கூப்பன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 15,000 வரை சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இதோடுமட்டுமின்றி பழைய ஸ்மார்ட்போனுக்கு ரூ. 5,000 வரை சலுகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகைகளை பயன்படுத்தி ரூ.79,999 விலையுடைய பிக்சல் 9 ஸ்மார்ட்போனை ரூ.40 ஆயிரத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம். அதிகபட்சமாக ரூ.46,750 வரை சலுகை வழங்கப்படுவதாக ஃபிளிக்கார்ட் அறிவித்துள்ளது.
இதேபோன்று கூகுள் பிக்சல் 9 ஏ ஸ்மார்ட்போனுக்கும் ரூ.16,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், ரூ. 49,999 விலையுடைய ஸ்மார்ட்போனை ரூ. 33,950 விலைக்குப் பெறலாம்.
இதையும் படிக்க | ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.