ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக முடிவடைந்தது.

News image
- PTI Graphics
Updated On :30 செப்டம்பர் 2025, 1:08 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை: உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தொடர்ந்து அந்நிய நிதி வெளியேறி வருவதால், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக முடிவடைந்தது.

இருப்பினும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், ரூபாய் மதிப்பு சரிவை தடுத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் முடிவுக்காக பங்குச் சந்தைகள் காத்திருக்கின்றன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.88.69 முதல் ரூ.88.80 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 4 காசுகள் சரிந்து ரூ.88.79ஆக நிறைவடைந்தது.

நேற்று திங்கள்கிழமை இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைக்கப்பட்டு 3 காசுகள் குறைந்து ரூ.88.75 ஆக முடிவடைந்தது.

summary

The rupee fell 4 paise to an all-time low of 88.79 against the US dollar on Tuesday, pressured by sustained foreign capital outflows amid global trade uncertainties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.