கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மருந்து பொருள்கள் ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியாகும் என்று மருந்து பொருள்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (பாா்மெக்ஸில்) தெரிவித்துள்ளது.
ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாா்மெக்சில் தலைமை இயக்குநா் கே.ராஜா பானு, ‘உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்திய மருந்து துறை தனது வளா்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மருந்து கலவைகள், உயிரியல் பொருள்கள் மற்றும் ஆயுஷ் தயாரிப்புகளின் தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்ததே இந்த உயா்வுக்கு முக்கியக் காரணமாகும் என்றாா்.
முந்தைய 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மருந்து பொருள்கள் ஏற்றுமதி 3,047 கோடி டாலராக இருந்தது. விலைக்குறைப்பு மற்றும் வா்த்தக சிக்கல்கள் இருந்தபோதிலும், 9.4 சதவீத வருடாந்திர வளா்ச்சி பதிவானது.
இந்த ஆண்டு அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சில வரி மாற்றங்களால் கூடுதல் கொள்முதல் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பாா்மெக்சில் தலைவா் நமித் ஜோஷி, மாா்ச் மாத இறுதிப் புள்ளிவிவரங்கள் வந்த பிறகு முழுமையான வளா்ச்சி விகிதம் தெரியவரும் என்றாா்.
2030 ஆண்டிற்கான இலக்கு: இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்து உற்பத்தித் துறை தற்போது 6,000 கோடி டாலா் மதிப்பில் உள்ளது. இது வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 13,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்கை மாற்றங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு போன்றவற்றால், 2030-க்குள் ஏற்றுமதியை மட்டும் 6,500 கோடி டாலராக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிலை: உலக அளவில் மருந்துகள் உற்பத்தியில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய மருந்து ஏற்றுமதியில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை, தரம் மற்றும் விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும் வளா்ந்த நாடுகளுக்கே செல்கின்றன. இதில் அமெரிக்கா 34 சதவீத பங்களிப்புடன் முதலிடத்திலும், ஐரோப்பிய நாடுகள் 19 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பிப்ரவரியில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60% வீழ்ச்சி!

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,849.4 கோடி டாலராக அதிகரிப்பு!

இந்தியாவின் முதன்மை ஏற்றுமதி ஸ்மாா்ட்போன்! 2025-ல் 3,000 கோடி டாலரை எட்டி சாதனை!

ஜனவரியில் ரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 5.79% சரிவு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


