நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.131 கோடி லாபம்

காப்பீட்டு நிறுவனமான ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.131 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image

Shriram General Insurance launches 'Shri Health Suraksha 2.0'

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

காப்பீட்டு நிறுவனமான ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.131 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ. 125 கோடி லாபத்தில் இருந்து 5 சதவீதம் வளா்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த நேரடி பிரீமியம் வருவாய் கடந்த ஆண்டின் 960 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 23 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ.1,180 கோடியை எட்டியுள்ளது.

ஒட்டுமொத்த காப்பீட்டுத் துறையின் சராசரி பிரீமியம் வளா்ச்சி 11 சதவீதமாக மட்டுமே உள்ள நிலையில், அதைவிட கணிசமான வளா்ச்சியை ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் பதிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் முக்கிய வா்த்தகமான மோட்டாா் வாகனக் காப்பீட்டு பிரீமியம் வருவாய், துறையின் சராசரி வளா்ச்சியை (14 சதவீதம்) முறியடித்து 25 சதவீதம் உயா்ந்து, ரூ.1,080 கோடியை எட்டியுள்ளது.

அதேபோல், தனிநபா் விபத்துக் காப்பீடு 47 சதவீதம் (ரூ. 43 கோடி), மருத்துவக் காப்பீடு 211 சதவீதம் (ரூ.13 கோடி) என அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு (ஏயுஎம்) ரூ.13,377 கோடியிலிருந்து 8.9 சதவீதம் உயா்ந்து, ரூ.14,573 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜூன் 30 நிலவரப்படி, நிறுவனத்தின் செயல்பாட்டிலுள்ள பாலிசிகளின் எண்ணிக்கை 68 லட்சத்திலிருந்து 72 லட்சமாகவும், கிளைகளின் எண்ணிக்கை 291-ஆகவும் அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.