தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 208.17 புள்ளிகள் உயர்ந்து 84,273.92 புள்ளிகளாகவும், நிஃப்டி 67.85 புள்ளிகள் உயர்ந்து 25,935.15 புள்ளிகளாக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

மும்பை: பல்வேறு துறைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை கொள்முதல் செய்ததாலும், உலகளாவிய சந்தைகளின் நேர்மறையான போக்கு உள்ளிட்டவையால் பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்ந்து முடிவடைந்தன.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ், வர்த்தக அமர்வின் போது 417.2 புள்ளிகள் உயர்ந்து 84,482.95 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 208.17 புள்ளிகள் உயர்ந்து 84,273.92 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 67.85 புள்ளிகள் உயர்ந்து 25,935.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

நிஃப்டி-யில் எடர்னல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி மற்றும் எம்&எம் ஆகிய பங்குகள் உயர்ந்தும், மறுபுறம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எச்சிஎல் டெக், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

சென்செக்ஸில் எடர்னல், டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட், டெக் மஹிந்திரா, என்டிபிசி, லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி சுசுகி இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டைட்டன் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், மறுபுறம் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

பார்மா மற்றும் பொது துறை பொதுத்துறை வங்கியைத் தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தன. மீடியா குறியீடு 2% உயர்ந்த நிலையில் ஆட்டோ குறியீடு 1% உயர்ந்தன.

அமெரிக்க உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஆசிய சந்தைகளின் நேர்மறையான வர்த்தகத்தால், உள்நாட்டு பங்குச் சந்தைகள் தொடர்ந்து மேல் நோக்கி சென்றது. கவனம் ஈர்க்கும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வலுவான முதலீடு மற்றும் ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களின் மனநிலையை வெகுவாக வலுப்படுத்தியது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.5 சதவீதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.4 சதவீதம் உயர்ந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கைகளில், ரூ.455 கோடி ஆர்டரை கையகப்படுத்திய நிலையில், ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் 3% அதிகரித்தன. பாட்டா இந்தியா பங்குகள் வலுவான 3வது காலாண்டு வருவாக்குப் பிறகு 4% உயர்ந்தன.

3வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு நவின் ஃப்ளூரின் இன்டர்நேஷனல் பங்கு விலை 4% சரிந்தன. வலுவான 3வது காலாண்டு முடிவுகளால் பிஎஸ்இ பங்குகளின் விலை 6% உயர்ந்தன. வலுவான 3வது காலாண்டு வருவாய் அடுத்து லுமாக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐ.எஸ்.ஜி.இ.சி. ஹெவி இன்ஜினியரிங் பங்குகள் 17 முதல் 20% வரை அதிகரித்தன.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ், 3எம் இந்தியா, டாடா ஸ்டீல், ஜிஇ ஷிப்பிங், நைகா, இண்டஸ் டவர்ஸ், ஏபிஎல் அப்பல்லோ, அசோக் லேலேண்ட், டைட்டன் கம்பெனி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமென்ட், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், எம்ஆர்பிஎல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், நவின் ஃப்ளோரின் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டின.

ஆசிய சந்தைகளில், ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங், தென் கொரியா கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடுகள் உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ.2,254.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.20 சதவீதம் குறைந்து 68.89 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Equity benchmark indices Sensex and Nifty advanced for the third straight session on Tuesday driven by firm global cues and optimism over India-US trade agreement.

கோப்புப் படம்
ஸ்டாா்லிங்க் இணையச் சேவை: குஜராத் அரசு ஒப்பந்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com