மும்பை: வங்கி, ஐடி மற்றும் மூலதனப் பொருட்கள் பங்குகளின் விலை உயர்வு காரணமாக, இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் லாபத்துடன் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் உயர்ந்து முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 83,598 புள்ளிகளாகவும் பிறகு குறைந்தபட்சமாக 82,987.43 புள்ளிகள் வரை சென்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 173.81 புள்ளிகள் உயர்ந்து 83,450.96 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 42.65 புள்ளிகள் உயர்ந்து 25,725.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஐடிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், லார்சன் & டூப்ரோ, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், அதானி போர்ட்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், சன் பார்மாசூட்டிகல்ஸ், மாருதி சுசுகி இந்தியா, இண்டிகோ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எடர்னல், டாடா ஸ்டீல், டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் அதானி எண்டர்பிரைசஸ், ஐடிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், இன்ஃபோசிஸ், எல்&டி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எடர்னல், டிரென்ட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை சரிந்தன.
துறை ரீதியாக, வங்கி குறியீடு 2 சதவீதம், ஐடி குறியீடு 1 சதவீதம், மீடியா குறியீடு 0.6 சதவீதம், ஆட்டோ குறியீடு 0.5 சதவீதம் உயர்ந்தன. அதே நேரத்தில் உலோகம் 1 சதவீதம் மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடும் 0.3 சதவீதம் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.49 சதவீதம் உயர்ந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடும் 0.26 சதவீதம் உயர்ந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், சிட்டிகுரூப் நிறுவனம் தரமிறக்கத்தால் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்கு விலை வரலாறு காணாத அளவிற்கு சரிந்தன. ரூ.5,000 கோடி மதிப்புள்ள பேக்கிங் திட்டத்தை கையகப்படுத்தியதால் கொச்சின் ஷிப்யார்டு பங்குகள் 3.7% உயர்ந்தன. ஆந்த்ரோபிக் உடனான ஒத்துழைப்பில் இன்போசிஸ் பங்குகள் 2% உயர்ந்தன.
பிரைன்பீஸ் சொல்யூஷன்ஸ், செல்லோ வேர்ல்ட், ஓலா எலக்ட்ரிக், கிளீன் சயின்ஸ், அபோட் இந்தியா, சி. இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ், கோஹன்ஸ் லைஃப், ப்ளூ ஜெட், ஃபர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ், நியூஜென் மென்பொருள் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார குறைந்த அளவில் முடிவடைந்தன.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஃபோர்ஸ் மோட்டார்ஸ், பாங்க் ஆஃப் இந்தியா, கிராஃபைட் இந்தியா, எல் அண்ட் டி, எஸ்பிஐ, லூபின், மேக்ஸ் பைனான்சியல், ஆஸ்ட்ரல், கிர்லோஸ்கர் ஆயில், இண்டஸ் டவர்ஸ், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட இன்று பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.79 சதவீதம் சரிந்து 68.13 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Stock markets closed higher for the second straight session, driven by gains in bank, IT and capital goods shares.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பங்குச் சந்தை எழுச்சி; நிஃப்டி 348, சென்செக்ஸ் 1,186.77 புள்ளிகள் உயர்வு!

கரடியின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,635.67, நிஃப்டி 488.20 புள்ளிகளுடன் நிறைவு!

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


