வீட்டில் உள்ள பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பெரும்பாலும் அலமாரிகளையே பயன்படுத்துகிறோம். வீட்டில் வேறு யாரேனும் நுழைந்துவிடக் கூடாது என பூட்டிவிட்டுச் செல்வதும் வழக்கம்.
வீட்டை பூட்டினோமா? இல்லையா?, பூட்டிவிட்டு சாவியை எங்கு வைத்தேன்? சாவி வைத்த இடத்தை மறந்துவிட்டேனே? என பலமுறை பல வகைகளில் வீட்டை பூட்டுவதிலும், பூட்டிய சாவியை பத்திரமாக வைத்துக்கொள்வதிலும் சிரமங்களை சந்தித்திருப்போம்.
அந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிமுகமாகியுள்ளது ஸ்மார்ட் லாக். அதாவது ஸ்மார்ட்போன்களில் உள்ளதைப்போன்றே விரல் ரேகைகளைக்கொண்டே நாம் லாக் செய்துகொள்ள முடியும். மீண்டும் விரல் ரேகைகள் மூலமே திறந்துகொள்ளவும் முடியும்.
வீடு மற்றும் சமையலறை உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் கவனம் செலுத்திவரும் ஜாசிஃப்ஸ் (JASIFS) நிறுவனம் இந்த ஸ்மார்ட் பூட்டை தயாரித்துள்ளது.
இந்தியாவில் இதன் விலை ரூ. 2999. எனினும் அமேசான் இணைய விற்பனை தளத்தில் ரூ. 998-க்கு இதனைப் பெற முடியும். வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
விரல்ரேகைகள் மூலம் பூட்டிக்கொள்ளலாம். பூட்டை திறந்துகொள்ளலாம். தனியாக புளூடூத் இணைப்போ, வேறு செயலிகளோ தேவையில்லை.
10 விரல் ரேகைகளையும் தரவு உள்ளீடாக கொடுத்துக்கொள்ளலாம். அதனால், எந்தவொரு விரலை வைத்தும் திறக்கலாம்.
பூட்டுக்கு தனி பேட்டரிகள் தேவையில்லை. சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 9,000 முறை பூட்டிக்கொள்ளலாம் அல்லது 6 - 12 மாதங்களுக்குப் பயன்படுத்தலாம்.
0.5 விநாடியில் பூட்டலாம், பூட்டை திறக்கலாம். கூடுதல் நேரங்கள் தேவைப்படாது.
சரியாக பூட்டவில்லை என்றாலோ, பேட்டரி தீரும் நிலை ஏற்பட்டாலோ இன்டிகேட்டர் மூலம் காட்டப்படும்.
வீடுகளுக்கு மட்டுமின்றி, பள்ளி பை, உடற்பயிற்சிக் கூட பை, சூட்கேஸ் உள்ளிட்ட தனிப்பட்ட பொருள்களையும் பூட்டி பாதுகாத்துக்கொள்ளலாம்.
மழையில் நனைந்தாலும் துருப்பிடிக்காத வகையிலான தனிமத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. தூசி படியாத வகையில் ஜிங்க் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.
இதன் எடை 90 கிராம் மட்டுமே. பயணத்தின்போதும் எடுத்துச் செல்ல எளிதானது.
Summary
Fingerprint Biometric Padlock Smart Lock
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் வசம் ஒப்படைப்பு! கோட்டாட்சியா் உத்தரவுப்படி நடவடிக்கை

வெய்யிலை சமாளிக்க சிறந்த ஏர்கூலர்! தள்ளுபடி விலையில்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



