மும்பை: வங்கி, உலோகம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளை முதலீட்டாளர்கள் கடைசி நேர வர்த்தகத்தில் வாங்கியதால், பெஞ்ச்மார்க் பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 3வது நாளாக லாபத்துடன் நிறைவடைந்தன.
இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 283.29 புள்ளிகள் உயர்ந்து 83,734.25 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 93.95 புள்ளிகள் உயர்ந்து 25,819.35 புள்ளிகளாக நிலைபெற்றது. பகல் நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 83,770.05 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது.
இன்றைய வர்த்தகத்தில் 3,277 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,713 பங்குகள் உயர்ந்தும், 1,456 பங்குகள் சரிந்தும், 108 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல், ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட், டிரென்ட், சன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்நதன. மறுபுறம் எடர்னல், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இண்டிகோ, ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி இந்தியா பவர் கிரிட் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி லைஃப், ஐடிசி, டாடா கன்ஸ்யூமர், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் மறுபுறம் ஓஎன்ஜிசி, எடர்னல், விப்ரோ, இன்ஃபோசிஸ், அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை சரிந்தன.
துறை ரீதியாக, ஐடி தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்தன. உலோகம், எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி குறியீடுகள் தலா 1% உயர்ந்தன. அதே நேரத்தில் தனியார் வங்கி, ரியல் எஸ்டேட், ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை தலா 0.5% உயர்ந்தன.
ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கி 225 1 சதவீதம் உயர்ந்தன. புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரிய ஆகிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (செவ்வாய்கிழமை) உயர்ந்து முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.995.21 கோடி மதிப்புள்ள பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.187.04 கோடி மதிப்புள்ள பங்குகளையும் வாங்கியுள்ளனர்.
பிரைன்பீஸ் சொல்யூஷன்ஸ், செல்லோ வேர்ல்ட், ஓலா எலக்ட்ரிக், கிளீன் சயின்ஸ், அபோட் இந்தியா, சி. இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ், கோஹன்ஸ் லைஃப், ப்ளூ ஜெட், ஃபர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ், நியூஜென் மென்பொருள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 100 பங்குகள் 52 வார குறைந்த நிலைக்கு சென்றன.
கிராஃபைட் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஃபோர்ஸ் மோட்டார்ஸ், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஜிண்டால் ஸ்டீல், மாரிகோ, கம்மின்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, இண்டஸ் டவர்ஸ், பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஹிட்டாச்சி எனர்ஜி, வோல்டாஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.33 சதவீதம் அதிகரித்து 67.64 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Sensex and Nifty extended their gains for the third straight session on Wednesday, driven by last-hour buying in bank, metal, and FMCG shares.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

சரிவுக்குப் பிறகு உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி! ஆட்டோ, வங்கி, உலோகம் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


