

சென்னை: வாகன உற்பத்தியாளரான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், டிசம்பர் 2025ல் தனது விற்பனையில் 49% வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும், டிசம்பரில் 2,952 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும் இன்று தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1,985 வாகனங்களை விற்பனை செய்ததாக தெரிவித்தது.
ஏப்ரல் முதல் டிசம்பர் 2025 காலகட்டத்தில் விற்பனை 25% அதிகரித்து 24,920 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இதுவே ஏப்ரல் முதல் டிசம்பர் 2024 வரையான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 19,911 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரையான காலகட்டத்தில், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட 5,723 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 8,427 வாகனங்கள் விற்பனை செய்து 47% வளர்ச்சி கண்டதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசான் ஃபிரோடியா இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:
விற்பனை செயல்திறன் குறித்து டிசம்பர் எங்களுக்கு மற்றொரு வலுவான மாதமாக அமைந்துள்ளது. எங்கள் வாகனங்களுக்கு நேர்மறையான வளர்ச்சி இருப்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது. நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் சுற்றுலா மற்றும் பயணப் பிரிவில் ஏற்பட்ட மீட்சியின் தெளிவான அறிகுறிகளை நாங்கள் காணத் தொடங்கியுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.