

புதுதில்லி: சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது டிசம்பர் மாதம் மொத்தம் 1,22,366 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 96,804 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 26% அதிகம் என்று இன்று தெரிவித்தது.
உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 97,823 வாகனங்களாக 24% வளர்ச்சி கண்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 78,834 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது அதிகம் என்று சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா தெரிவித்துள்ளது.
நிதியாண்டில் ஏற்றுமதி 24,543 வாகனங்களாக இருந்தது, இதுவே கடந்த ஆண்டு 17,970 வாகனங்களுடன் ஒப்பிடும் போது இது 37% அதிகம்.
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் தீபக் முத்ரேஜா கூறுகையில், நிறுவனமானது டிசம்பரில் வலுவாக நிறைவு செய்துள்ளது.
புதிய ஆண்டில் அனுபவத்தை மையமாக கொண்டு விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகச் செல்ல தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.