

புதுதில்லி: புவிசார் அரசியல் குறித்த எச்சரிக்கையான மனநிலைக்கு மத்தியில், இன்றையை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,197 ஆக உள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜனவரி மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் 18,270 லாட் வர்த்தகத்தில் பீப்பாய்க்கு 0.81% உயர்ந்து ரூ.5,197 ஆக உள்ள நிலையில், பிப்ரவரி மாத ஒப்பந்தத்தில் 3,011 லாட் வர்த்தகத்தில், பீப்பாய்க்கு 0.72% உயர்ந்து ரூ.5,202 ஆக உள்ளது.
சர்வதேச சந்தைகளில், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.24% உயர்ந்து பீப்பாய்க்கு 57.46 அமெரிக்க டாலராக உள்ளது. அதே நேரத்தில் நியூயார்க்கில் ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்து பீப்பாய்க்கு 60.78 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடாக வெனிசுவேலா இருப்பதால், விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் குறித்த கவலைகளுக்கு இடையில் சந்தை எச்சரிக்கையாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.