

மும்பை: ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரைத் தேடும் பணியை டாடா குழுமம் தொடங்கியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், தனது குறைந்த கட்டண விமானச் சேவை துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸுக்கும், புதிய நிர்வாக இயக்குநரை நியமிக்கவும் டாடா குழுமம் பொருத்தமான நபரை தேடி வருகிறது. இதனிடையில், அதன் நிர்வாக இயக்குநர் அலோக் சிங் 2027ல் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார்.
இரு தரப்பினரும், அதாவது வில்சன் மற்றும் டாடா குழுமம் 2027-க்குப் பிறகு ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை. எனவே, ஏர் இந்தியாவின் உயர் பதவிக்கு பொருத்தமான தலைவர் ஒருவரை தேடி வருவதாக தகவலை அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.