

மும்பை: அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ததைத் தொடர்ந்து அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், சாதகமான உலகளாவிய அறிகுறிகள் இருந்தபோதிலும், முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்ததால், இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தன.
வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல்கள் உலகச் சந்தைகளுக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் ஜப்பானின் நிக்கேய் மற்றும் கொரியாவின் கோஸ்பி ஆகியவை தலா 3% க்கும் மேல் உயர்ந்தன. சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 1% க்கும் மேல் உயர்ந்த நிலையில் ஐரோப்பாவில் - ஜெர்மனியின் டாக்ஸ் (DAX) 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.
இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 322.39 புள்ளிகள் சரிந்து 85,439.62 ஆகவும், நிஃப்டி-50 குறியீடும் 78.25 புள்ளிகளுடன் சரிவுடன் நிலைபெற்றது. ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.05% உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.07% உயர்ந்தன.
நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டிய பங்குகள்
நெஸ்லே இந்தியா பங்குகள் 2.76% உயர்வுடனும், பெல் நிறுவன பங்குகள் 2.53% உயர்வுடன் அதே வேளையில் ஐஷர் மோட்டார்ஸ் பங்குகள் 2.17% உயர்வுடன் நிறவடைந்தன.
நிஃப்டி 50 குறியீட்டில் அதிக நஷ்டமடைந்த பங்குகள்
ஹச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 2.31% சரிவுடனும், விப்ரோ 2.23% சரிவுடனும் அதே வேளையில் இன்ஃபோசிஸ் 2.21% சரிவுடன் முடிவடைந்தன. அதே போல நிஃப்டி 50 குறியீட்டில் மொத்தம் 27 பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது.
துறை சார்ந்த குறியீடுகள்
துறைசார் குறியீடுகள் கலவையாக இன்று முடிவடைந்தன. நிஃப்டி ரியாலிட்டி 2.07% உயர்ந்த நிலையில் தகவல் தொழில்நுட்பம் 1.43% சரிந்தன.
நுகர்வோர் குறியீடு 1.12% உயர்ந்த அதே நேரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 1.02% சரிந்தது. நிஃப்டி-யில் எஃப்எம்சிஜி 0.68% உயர்வுடனும், மீடியா 0.62% உயர்வுடன் இருந்த நிலையில் மெட்டல் 0.60% உயர்வுடன் நிறைவு.
நிஃப்டி வங்கி 0.18% சரிந்து 60,044.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது.
அதிகம் பரிவர்த்தனையான பங்குகள்
வோடபோன் ஐடியா பங்குகள் 100.9 கோடி பங்குகளுடன், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி 32 கோடி பங்குகளுடன் வர்த்தகமான நிலையில் யெஸ் பேங்க் 15.3 கோடி பங்குகளுடன் என்எஸ்இ-யில் பரிவர்த்தனை ஆனது. பங்குச் சந்தை பலவீனமாக இருந்தபோதிலும், பிஎஸ்இ-யில் எட்டு பங்குகள் 15% க்கும் மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்பி வங்கி, கோயல் அலுமினியம்ஸ் மற்றும் டூரிசம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 பங்குகள் சந்தை பலவீனமாக இருந்தபோதிலும் பிஎஸ்இ-யில் 15% க்கும் மேல் உயர்ந்தன.
52 வாரங்களின் உச்சம் அடைந்த பங்குகள்
ரிலையன்ஸ், எஸ்பிஐ, மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் டைட்டன் கம்பெனி உள்ளிட்ட 209 பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
52 வார குறைந்தபட்ச விலையை எட்டிய பங்குகள்
டாடா கெமிக்கல்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், வேதாந்த் ஃபேஷன்ஸ், எம்பசி டெவலப்மென்ட்ஸ், கான்கார்ட் பயோடெக் மற்றும் கோஹன்ஸ் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட 144 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.
சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.13% சரிந்து $60.67 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.