

மும்பை: அமெரிக்க டாலர் குறியீட்டில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ரூபாய் நான்கு நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான 12 காசுகள் உயர்ந்து ரூ.90.18ஆக நிலைபெற்றது.
பலவீனமான உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் மற்றும் அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் ஆகியவை ரூபாய் மதிபின் உயர்வைத் தடுத்தாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.90.22 என்ற அளவில் வர்த்தகத்தை தொடங்கி, பிறகு ரூபாயின் மதிப்பு ரூ.90.08 முதல் ரூ.90.25 என்ற வரம்பில் வர்த்தகமாகி, வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் இறுதி நிலையிலிருந்து 12 காசுகள் உயர்ந்து ரூ.90.18ஆக நிலைபெற்றது.
நேற்று (திங்கள்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.90.30ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.