

சென்செக்ஸ் - நிஃப்டி: பங்குச் சந்தையில் தொடரும் கரடியின் ஆதிக்கத்தால் மும்பை பங்குச் சந்தை எண் குறியீடு எண் சென்செக்ஸ் வியாழக்கிழமை 780 புள்ளிகள் வரை சரிந்தது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள், வெனிசுவேலா மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச்சந்தை கடந்த 3-4 நாள்களாக மிகவும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை மற்றும் பலவீனமான ஆசிய சந்தைகள் குறித்த கவலைகளால் சென்செக்ஸ் 780 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்த வாரத்தில் தொடர்ந்து 4-வது நாளாக சரிவைச் சந்தித்த மும்பை பங்குச் சந்தை ஒரே நாளில் 780.18 புள்ளிகள் சரிந்தவுடன் இன்றைய நாள் முடிவில், 84,180.96 என நிறைவடைந்தது. இது இன்றைய நாள் வர்த்தகத்தில் 0.92 சதவிகித சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச் சந்தையில் ஐசிஐசிஐ வங்கி (0.51%), பஜாஜ் பைனான்ஸ்(0.33%), பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எட்டர்னல்ஸ்(0.93%) ஆகிய பங்குகள் கணிசமான லாபம் பார்த்தன.
அதேவேளையில், ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, இஸ்போஸிஸ், எல் அண்ட் டி, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பல முன்னணி பங்குகளும் சரிவை சந்தித்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 780.18 புள்ளிகள் சரிந்து 84,180.96 ஆகவும், நிஃப்டி 263.90 புள்ளிகள் சரிந்து 25,876.85 கீழ் இறங்கி நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவிகிதம் சரிந்தன.
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.25 சதவிகிதம், லார்சன் அண்ட் டூப்ரோ 1.39 சதவிகிதம் மற்றும் இன்ஃபோசிஸ் 1.39 சதவிகிம், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 1.44 சதவிகிதம், டாடா ஸ்டீல் 1.52 சதவிகிதம் , பஜாஜ் ஃபின்சர்வ் 1.55 சதவிகிதம் சரிந்தன. டெக் மஹிந்திரா 2.04 சதவிகிதம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.10 சதவிகிதம், டிசிஎஸ் 2.21 சதவிகிதம் சரிந்தன.
எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், பொதுத்துறை வங்கிகள் 2-3 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை ஒப்புதல் அளித்தார். இதனால், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், கே.பி.ஆர். மில், பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ், அபெக்ஸ் ஃப்ரோஸன் ஃபுட்ஸ், அவந்தி ஃபீட்ஸ் உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 4 முதல் 9 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்தன.
வெள்ளி விலை கிலோ ரூ.2.5 லட்சத்திற்கும் கீழே சென்றதால், இந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 6 சதவிகிதம் சரிந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.