

புதுதில்லி: ஐடி சேவைகள் நிறுவனமான டெக் மஹிந்திரா, நிதியாண்டின் 3வது காலாண்டு முடிவில் அதன் லாபம் 14.11% அதிகரித்து ரூ.1,122 கோடியாக இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (திங்கள்கிழமை) அதன் பங்குகள் கிட்டத்தட்ட 3% உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் 2.85% உயர்ந்து ரூ.1,718.10ஆகவும், வர்த்தக நேரத்தின் போது இது 3.95% உயர்ந்து ரூ.1,736.55 என்ற 52 வார உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில் 2.86% உயர்ந்து ரூ.1,718.30ஆக வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில், வர்த்தக நேரத்தின் போது அதன் பங்குகள் 3.92% உயர்ந்து ரூ.1,736ஐ எட்டியது.
இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,685.14 கோடி அதிகரித்து ரூ.1,68,325.92 கோடியாக உள்ளது.
அதே வேளையில், மஹிந்திரா குழும நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.983.2 கோடி நிகர லாபத்தையும், அதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் ரூ.1,194 கோடி லாபத்தையும் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.