

பங்குச் சந்தைகள் இன்று(ஜன. 30, வெள்ளிக்கிழமை) சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,947.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்தது.
பின்னர் சற்று ஏற்றமடைந்த நிலையில் சென்செக்ஸ் 296.59 புள்ளிகள் குறைந்து 82,269.78 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98.25 புள்ளிகள் குறைந்து 25,320.65 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
இன்று சென்செக்ஸ் பங்குகளில் டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மறுபுறம் எம் அண்ட் எம், ஐடிசி, எஸ்பிஐ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன் ஆகியவை 1.3 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமாகின.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.19 சதவீதம் சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.32 சதவீதம் உயர்ந்தது.
துறைவாரியாக, நிஃப்டி மெட்டல் குறியீடு 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து பெரும் இழப்பைச் சந்தித்தது. நிஃப்டி ஐடி பங்குகளும் 1% சரிந்தன. நிஃப்டி மீடியா, எஃப்எம்சிஜி குறியீடுகள் ஏற்றமடைந்தன.
கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றம், வெளிநாட்டுப் பங்குகள் அதிகம் விற்பனை ஆகியவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பிப். 1 ஆம் தேதி 2026- 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி அன்று பங்குச்சந்தைகள் வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் இன்று பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 91.98 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.