பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!

முன்னணி இயற்கை வள உற்பத்தி நிறுவனமான வேதாந்தா, கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு ரூ.62,722 கோடியைப் பங்களிப்பாக (வரி, கட்டணங்கள் உள்பட) வழங்கியுள்ளது.

Published On :27 ஜூன் 2026, 3:03 am IST

முன்னணி இயற்கை வள உற்பத்தி நிறுவனமான வேதாந்தா, கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு ரூ.62,722 கோடியைப் பங்களிப்பாக (வரி, கட்டணங்கள் உள்பட) வழங்கியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் பங்களிப்பைக் காட்டிலும் 13.3 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் சிறந்த நிதிச் செயல்பாடுகளே இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள 11-ஆவது வரி வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வேதாந்தா நிறுவனம் அரசுக்கு செலுத்திய ஒட்டுமொத்த பங்களிப்பு ரூ.4,83,034 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் ரூ.62,722 பங்களிப்பானது, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த செயல்பாட்டு வருவாயில் 36 சதவீதமாகும்.

நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் அதிகபட்சமாக ஜிங்க் பிரிவு ரூ.19,053 கோடியையும், அதைத் தொடா்ந்து அலுமினிய பிரிவு ரூ.15,788 கோடியையும், எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு ரூ.11,697 கோடியையும் பங்களிப்பாக வழங்கியுள்ளன.

இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள வேதாந்தா, உலோகங்கள் மற்றும் முக்கியமான தாதுகள் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.