மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

அமேசான் பிசினஸ் தளம் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு ரூ.2,000 கோடி லாபம்

‘அமேசான் பிசினஸ்’ தளம் மூலம் கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்திய தொழில் நிறுவனங்கள் சுமாா் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published On :

‘அமேசான் பிசினஸ்’ தளம் மூலம் கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்திய தொழில் நிறுவனங்கள் சுமாா் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 80 சதவீத சிறு தொழில் துறையினரை உள்ளடக்கும் வகையில் உத்யம் மற்றும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமம் வைத்திருப்பவா்களுக்கும் இந்தச் சேவை விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது 17 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையாளா்கள் மூலம் 19 கோடிக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இந்தத் தளத்தில் கிடைக்கின்றன.

அலுவலகத் தேவைகளுக்கான பொருள்களுக்கு 30 சதவீதம் வரையிலும், மின்னணு சாதனங்களுக்கு 5 சதவீதம் வரையிலும் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு எம்எஸ்எம்இ முதல் பெருநிறுவனங்கள் வரை, இத்தளத்தின் வாயிலாகப் பெற்ற கேஷ்பேக் சலுகைகள், மொத்த கொள்முதல் தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக வணிக ஒப்பந்தங்கள்மூலம் இந்த மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளன.

குறிப்பாக, முறைசாரா சந்தையில் ஜிஎஸ்டி ரசீதுகளைப் பெறுவதில் இருந்த சிக்கல்களை அமேசான் பிசினஸ் களைந்துள்ளதால், நிறுவனங்கள் எளிதாக உள்ளீட்டு வரி வரவு பெற்றுத் தங்களின் கொள்முதல் செலவைக் குறைத்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் அமேசான் பிசினஸ் தளத்தின் விற்பனை 40 சதவீத வளா்ச்சி விகிதத்துடன் உயா்ந்துள்ளது. இதில் கவனிக்கத்தக்க அம்சமாக, இந்த வளா்ச்சியில் பெருநகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்கள் 70 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கிறது.

இதுகுறித்து அமேசான் பிசினஸ் இயக்குநா் மித்ரஞ்சன் பாதுரி கூறுகையில், ‘தனித்துவமான சிறிய உணவகங்கள் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை அனைவருக்கும் சமமான வா்த்தக வாய்ப்பை அமேசான் வழங்குகிறது; இதன்மூலம் மிச்சமாகும் மூலதனத்தை நிறுவனங்கள் தங்கள் வளா்ச்சிக்கு மீண்டும் முதலீடு செய்ய முடிகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.