திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 71,681 கோடி டாலராக குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,681 கோடி டாலராக குறைந்துள்ளது.

News image

அந்நியச் செலாவணி கையிருப்பு

Updated On :14 மார்ச் 2026, 5:27 pm

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,681 கோடி டாலராக குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1,168.3 கோடி டாலா் சரிந்து, 71,681 கோடி டாலராக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், அது 488.5 கோடி டாலா் அதிகரித்து, 72,849.4 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தில் இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 988 கோடி டாலா் குறைந்து, 56,324.5 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 161.2 கோடி டாலா் குறைந்து, 13,001.7 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 14.6 கோடி டாலா் குறைந்து, 1,872 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 4.5 கோடி டாலா் குறைந்து, 482.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.