சண்டீகர்: வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநருமான எம்.எல். ஜாட், இந்தியாவின் பால் உற்பத்தி 1950 கால கட்டத்தில் 17 மில்லியன் டன்னிலிருந்து தற்போது 2025ல் 247 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மொத்த உற்பத்தியில் 65 சதவீதப் பங்களிப்பையும், இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் 16% பங்களிப்பையும் அளிக்கிறது. மேலும் இது 46.1 சதவீத மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவதாக தெரிவித்தார்.
ஹரியானாவில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போது, சுமார் 20,000 கால்நடை மருத்துவர்களைப் பணியமர்த்தவும், கல்லூரிகள் மற்றும் ஆய்வகங்களுக்கு மானியம் வழங்கவும், கூட்டுறவுத் துறையினருக்கு வரிச் சலுகைகளை அளிக்கவும் ஏதுவாக, மத்திய பட்ஜெட்டில் கால்நடை வளர்ப்புத் துறைக்கு 6,153 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியப் பால் உற்பத்தி 1950ல் 17 மெட்ரிக் டன்னிலிருந்து 2025ல் 247 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. பஞ்சாப்-ஹரியானா உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது என்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் பால் தேவையானது 480 முதல் 606 மெட்ரிக் டன்னாக இருக்கும் என நிதி ஆயோக் கணித்துள்ளதாக ஜாட் தெரிவித்தார்.
நாட்டின் மொத்த பால் உற்பத்தியில், நாட்டு எருமைகளின் பங்கு 31.18 சதவீதமும், அதனைத் தொடர்ந்து கலப்பின மாடுகள் 30.80 சதவீதமும், நாட்டு மாடுகள் 11.20 சதவீதமும், வகைப்படுத்தப்படாத மாடுகள் 9.64 சதவீதமும், வகைப்படுத்தப்படாத எருமைகள் 11.97 சதவீதமும், ஆடுகள் 3.32 சதவீதம் மற்றும் வெளிநாட்டு மாடுகள் 1.89 சதவீதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 768.1 மில்லியன் டன்னாக சரிவு!
நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


