வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

உற்பத்தி துறை மாா்ச்சில் கடும் சரிவு: 2.5 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலை

இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளா்ச்சி மாா்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 2:56 am IST

இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளா்ச்சி மாா்ச் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ குறியீடு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

எச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிப்ரவரி மாதம் 56.9-ஆக இருந்த உற்பத்தி துறை பிஎம்ஐ குறியீடு, மாா்ச் மாதத்தில் 53.8-ஆக குறைந்துள்ளது. இது 2021, செப்டம்பருக்குப் பிறகு பதிவான மிகக்குறைந்த அளவாகும். அதேபோல், சேவைகள் துறை குறியீடும் 58.1-லிருந்து 57.2-ஆக சரிந்துள்ளது.

மந்தநிலைக்குக் காரணங்கள்: நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வலுவாக இருந்த தனியாா் துறை நடவடிக்கைகள், தற்போது அக்டோபா் 2022-க்குப் பிந்தைய மந்தமான நிலையை எட்டியுள்ளன. இதற்கு மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் தொடா்ச்சியாக விலைவாசி உயா்வு, எரிசக்தி தட்டுப்பாடு உள்பட முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

பொருளாதார தாக்கம்: எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் விலை உயா்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.