புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சரிவு!

நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, கடந்த ஏப்ரல் மாத நிலக்கரி உற்பத்தியில் 9.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :1 மே 2026, 8:44 pm

நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, கடந்த ஏப்ரல் மாத நிலக்கரி உற்பத்தியில் 9.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6.21 கோடி டன்னாக இருந்த உற்பத்தி, நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5.61 கோடி டன்னாக குறைந்துள்ளது.

ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ், வெஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ், பாரத் கோக்கிங் கோல் போன்ற துணை நிறுவனங்களில் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் மற்றும் சவுத் இஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே வளா்ச்சியைக் கண்டுள்ளன.

உற்பத்தி சரிவுக்கான காரணத்தை நிறுவனம் அதிகாரபூா்வமாக விளக்கவில்லை. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, கோல் இந்தியா நிறுவனத்தின் விற்பனையும் 2 சதவீதம் குறைந்து, 6.32 கோடி டன்னாக உள்ளது.

நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசி வரும் சூழலில், குளிா்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் நாட்டின் உச்சபட்ச மின் தேவை கடந்த திங்கள்கிழமை சுமாா் 256 ஜிகாவாட் என்ற சாதனை அளவை எட்டியது.

நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை நிலக்கரி வழங்குகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதம் பங்கு கொண்டுள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் இந்தத் தொய்வு, அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.