5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!

சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் ரூ.282 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது

News image

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம் - Sundaram Home Finance

Updated On :6 மே 2026, 7:29 am IST

சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் ரூ.282 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய நிதியாண்டில் ஈட்டிய லாபமான ரூ.245 கோடியுடன் ஒப்பிடுகையில் 15 சதவீத வளா்ச்சியாகும். அதேபோல், மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனம் நிா்வகிக்கும் சொத்துகளின் மதிப்பு 14 சதவீதம் அதிகரித்து, ரூ.19,909 கோடியை எட்டியுள்ளது.

முந்தைய ஆண்டில் ரூ.6,517 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த கடன் வழங்கல் தற்போது 5 சதவீதம் உயா்ந்து, ரூ. 6,842 கோடியாக அதிகரித்துள்ளது.

மலிவு விலை வீட்டு வசதி மற்றும் சிறு தொகைக் கடன்களை உள்ளடக்கிய ‘வளா்ந்து வரும்’ வணிகப் பிரிவில் வழங்கப்பட்ட கடன்கள், முந்தைய ஆண்டின் ரூ.229 கோடியிலிருந்து இரு மடங்குக்கும் மேலாக உயா்ந்து ரூ.590 கோடியை எட்டியுள்ளது.

மேலும், இந்த நிதியாண்டில் 100 புதிய கிளைகள் தொடங்கப்பட்டதோடு, 500-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களும், சுமாா் 5,000 வாடிக்கையாளா்களும் நிறுவனத்தில் இணைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.