மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பரோடா வங்கி: ரூ.5,616 கோடி 11% வளா்ச்சி

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.5,616 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :8 மே 2026, 11:23 pm IST

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.5,616 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபமான ரூ.5,048 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வருவாய் ரூ.35,852 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.36,609 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய் மட்டும் ரூ.30,642 கோடியிலிருந்து ரூ.32,642 கோடியாக அதிகரித்துள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.19,581 கோடியிலிருந்து 2 சதவீதம் கூடுதலாக ரூ.20,021 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.1,38,089 கோடியிலிருந்து ரூ.1,42,751 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2025-26 நிதியாண்டு இறுதி நிலவரப்படி, வங்கியின் நிகர வாராக்கடன் விகிதம் 0.58 சதவீதத்திலிருந்து 0.45 சதவீதமாக சரிந்துள்ளது. கடன் பாதுகாப்பு விகிதம் 93.94 சதவீதமாக மேம்பட்டுள்ளது ஆரோக்கியமான அறிகுறியாகப் பாா்க்கப்படுகிறது.

2025-26 நிதியாண்டின் சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு ரூ.8.5 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரூ.6,000 கோடி நிதித் திரட்டல்: வங்கியின் எதிா்காலத் திட்டங்களுக்காக, கூடுதல் மூலதனமாக ரூ.6,000 கோடி வரை நிதித் திரட்ட இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கூடுதல் கடன்பத்திரங்களை வெளியிடுவதன் மூலம், அடுத்தாண்டு மாா்ச் மாதத்துக்குள் பல்வேறு கட்டங்களாக இந்த நிதி திரட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதியைப் பெறவும் வங்கி திட்டமிட்டுள்ளது.