புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

24,200-க்குக் கீழ் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு; தகவல் தொழில்நுட்பப் பங்குகள் உயர்வு!!

சென்செக்ஸ் 516.33 புள்ளிகள் சரிந்து 77,328.19 ஆகவும், நிஃப்டி 150.50 புள்ளிகள் சரிந்து 24,176.15 ஆக நிலைபெற்றது.

News image

கோப்புப்படம் - ANI

Updated On :57 நிமிடங்கள் முன்பு

மும்பை: ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை உயர்வை கடந்து அரசியல் அழுத்தங்கள் மீண்டும் எழுந்ததால், இன்றைய வர்த்தகத்தில், இந்திய குறியீடுகள் கடும் சரிவைக் கண்டன. நிஃப்டி 24,200 புள்ளிகளுக்குக் கீழ் சென்று நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில், இந்தியச் பங்குச் சந்தைகள் பலவீனமாகத் தொடங்கியது. மேலும், தொடர் விற்பனை அழுத்தம் உள்ளிட்டவையால், நிஃப்டி 24,126.65 என்ற குறைந்தபட்ச நிலைக்கு சென்றது. இருப்பினும், முதலீட்டாளர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பங்குகளில் வாங்கி குவித்ததால், பங்குச் சந்தை குறியீடுகள் சரிவிலிருந்து ஓரளவு மீண்டது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 516.33 புள்ளிகள் சரிந்து 77,328.19 ஆகவும், நிஃப்டி 150.50 புள்ளிகள் சரிந்து 24,176.15 ஆக நிலைபெற்றது. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.15% சரிந்த நிலையில், நிஃப்டி ஸ்மால் கேப் குறியீடும் 0.22% உயர்ந்தன.

இந்த வாரத்தில், சென்செக்ஸ் 0.5 சதவீதம் உயர்ந்த அதே நேரத்தில் நிஃப்டி 50 குறியீடும் 0.7 சதவீதம் உயர்ந்தன.

சென்செக்ஸில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் மார்ச் காலாண்டு வருவாய்க்குப் பிறகு 6.62 சதவீதம் சரிந்தன. அதே வேளையில், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்.சி.எல் டெக் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் எஸ்பிஐ, கோல் இந்தியா, எச்எப்டிசி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, டாடா கன்சூமர், அதானி துறைமுகங்கள் மற்றும் டைட்டன் நிறுவனம் ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டியது.

துறைசார் குறியீடுகளில், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், எஃப்எம்சிஜி ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்துக் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன. இதில் பொதுத்துறை வங்கிக் குறியீடு 3 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 1 சதவீதமும் சரிந்தன. அதே சமயம் தனியார் வங்கிகள், உலோகம், எரிசக்தி, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன.

தெர்மாக்ஸ், ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், கிராஃப்ட்ஸ்மேன், நெட்வெப், நாட்கோ பார்மா, அதானி போர்ட்ஸ், சாய் லைஃப் சயின்சஸ், பாலிகேப் இந்தியா, லாரஸ் லேப்ஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, கம்மின்ஸ் இந்தியா, அபார் இண்டஸ்ட்ரீஸ், ஆர்பிஎல் வங்கி, பிஎச்இஎல், வெல்ஸ்பன் கார்ப், ஹிட்டாச்சி எனர்ஜி உள்ளிட்ட 210-க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

சில பல குறிப்பிட்ட பங்குகளின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, எதிர்பார்த்ததை விடக் குறைந்த வருவாய் முடிவுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து எஸ்பிஐ பங்குகள் 6.7 சதவீதம் சரிந்தன. 4வது காலாண்டு வலுவான வருவாய் முடிவுகளை அறிவித்ததால் டாபர் இந்தியா பங்குகள் 3.6 சதவீதம் உயர்ந்தன.

காலாண்டு லாபத்தில் 32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த போதிலும் பிஎஸ்இ பங்குகள் 1.4 சதவீதம் சரிந்தன. 4வது காலாண்டு நிகர வட்டி வருவாய் பலவீனமாக இருந்ததால் குளோபஸ் ஸ்பிரிட்ஸ் பங்குகள் 11 சதவீதம் சரிந்தன. 4வது காலாண்டு லாபம் 25 சதவீதம் உயர்ந்ததால் சொனாட்டா சாஃப்ட்வேர் பங்குகள் 9 சதவீதம் உயர்ந்தன. அதேபோல வலுவான காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து தெர்மாக்ஸ் பங்குகள் 12.5 சதவீதம் லாபம் ஈட்டின.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி உயர்வுடன் முடிவடைந்தன. அதே வேளையில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகிய முக்கியக் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 340.89 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

சர்வதேச ப்ரெண்ட் கச்சா எண்ணெய், பேரலுக்கு ஒன்றுக்கு சுமார் 100 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.

Summary

Nifty closing below the 24,200 mark amid renewed geopolitical concerns following reported clashes between Iran and the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.