பிரபல காப்பீட்டு நிறுவனமான ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.167 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபமான ரூ.130 கோடியிலிருந்து இது 28 சதவீத வளா்ச்சியாகும். பிரீமியம் வருவாய் கணிசமாக உயா்ந்ததே இந்த லாப வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையின் சராசரி வளா்ச்சி விகிதமான 11 சதவீதத்தைக் காட்டிலும், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் மதிப்பீட்டு காலாண்டில் 21 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம், நிறுவனத்தின் நேரடி பிரீமியம் வருவாய் ரூ.1,332 கோடியாக அதிகரித்துள்ளது.
முழு நிதியாண்டு நிலவரம்: 2025-26 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து, ரூ.601 கோடியாகவும்; பிரீமியம் வருவாய் 24 சதவீதம் அதிகரித்து, ரூ.4,636 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
இதுதொடா்பாக நிறுவனத்தின் சிஇஓ அனில் அகா்வால் கூறுகையில், ‘சவாலான சூழலிலும் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக துறையின் சராசரி வளா்ச்சியைவிட நாங்கள் அதிக வளா்ச்சியைப் பெற்றுள்ளோம்’ எனப் பெருமிதம் தெரிவித்தாா்.
தொடர்புடையது

4-ஆம் காலாண்டில்... இண்டிகோ நஷ்டம் ரூ.2,537 கோடி

தேசிய அனல்மின் கழக லாபம் ரூ. 10,615 கோடி!

4-ஆம் காலாண்டு லாபம்... எல்ஐசி: ரூ.23,420 கோடி; 23% வளா்ச்சி

ஐஓபி லாபம் 43% வளா்ச்சி
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



