இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ஆவது காலாண்டில் ரூ.4,488 கோடி நிகர லாபத்தை ஈட்டி, 4.20 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.4,307 கோடி லாபமே ஈட்டியிருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 12.34 சதவீதம் அதிகரித்து, ரூ.33,981 கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், முழு நிதியாண்டைக் கணக்கிடும்போது நிறுவனத்தின் நிகர லாபம் 4.30 சதவீதம் சரிந்து, ரூ.16,642 கோடியாக குறைந்துள்ளது. இது முதலீட்டாளா்கள் மத்தியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மென்பொருள் பிரிவில் வருவாய் 14.1 சதவீதம் சரிந்ததும், ஐரோப்பிய சந்தையில் வணிகம் 2.9 சதவீதம் சுருங்கியதும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியைப் பாதித்துள்ளதாக சந்தை நிபுணா்கள் கருதுகின்றனா்.
எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யாத இந்த நிதிநிலை முடிவுகளால், பங்குச்சந்தையில் புதன்கிழமை ஹெச்சிஎல் டெக் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 10.85 சதவீதம் சரிந்து, ரூ.1,285.20-ஆக நிலைபெற்றது. இதன் காரணமாக, ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாா் ரூ.42,428 கோடி சரிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளில் அதிக இழப்பைச் சந்தித்த பங்காக இது முதலிடம் பிடித்தது.
நிறுவனத்தின் வருங்கால வளா்ச்சி குறித்து பேசிய சிஇஓ சி.விஜயகுமாா், ‘அடுத்த நிதியாண்டில் வருவாய் வளா்ச்சி 1 முதல் 4 சதவீதத்துக்குள் மட்டுமே இருக்கும். உலகளாவிய சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் வாடிக்கையாளா்கள் செலவுகளைக் குறைத்து வருவது இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பாரம்பரிய மென்பொருள் ஒப்பந்தங்களின் மதிப்பு 2 முதல் 3 சதவீதம் வரை குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது’ என்றாா்.
தொடர்புடையது

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் பங்குகள் 10.5% சரிவுடன் நிறைவு!

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


