48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் பங்குகள் 10.5% சரிவுடன் நிறைவு!

ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கத் தவறியதையடுத்து, நிறுவனத்தின் பங்குகள் 10.5 சதவீதம் சரிந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:30 pm

புதுதில்லி: ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கத் தவறியதையடுத்து, அதன் பங்குகள் 10.5 சதவீதம் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில், ஜூபிலியன்ட் பங்கு 10.54 சதவீதம் சரிந்து ரூ. 412.70 என்ற நிலையில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே, ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் 11.15 சதவீதம் சரிந்து ரூ. 409.85 என்ற நிலையை எட்டியது. கடந்த 52 வாரங்களில் ஜூபிலியண்ட் பங்கு எட்டிய மிகக் குறைந்த விலை இதுவேயாகும்.

நிஃப்டி-யில் ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் 10.39 சதவீதம் சரிந்து ரூ. 413.15 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நாட்டின் முன்னணி விரைவு உணவுச் சங்கிலி நிறுவனமான ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் உள்நாட்டு வருவாய், 2025-26 நிதியாண்டில் மார்ச் காலாண்டில் 6.2 சதவீதம் உயர்ந்து ரூ. 1,686 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

டோமினோஸ் மற்றும் போபியேஸ் உள்ளிட்ட நிறுவனங்களை தன்வசம் கொண்டுள்ள இந்த நிறுவனம், தனது முழு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ரூ. 6,887.8 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. அதே வேளையில், சர்வதேச செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாயையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வருவாய், மார்ச் காலாண்டில் ரூ. 2,505.8 கோடி என்றது.

கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 19.1 சதவீதம் அதிகமாகும்.

Summary

Shares of Jubilant Foodworks Ltd tumbled 10.5 per cent on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.