புதுதில்லி: பங்குச் சந்தையின் ஜாம்பவான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தொடர்ந்து 2வது நாளாக வீழ்ச்சியடைந்து, அதன் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து ஒட்டுமொத்த நிஃப்டி 50 குறியீட்டையும் கீழ்நோக்கி இழுத்தது.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் 3.41 சதவீதம் சரிந்து ரூ. 1,304.75 என்ற அளவில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் நடுவில், நிறுவனத்தின் பங்குகள் 4.50 சதவீதம் சரிந்து ரூ. 1,290 என்ற நிலைக்கு சென்றது. அதுவே நிஃப்டி-யில் 3.39 சதவீதம் சரிந்து ரூ. 1,304.70 ஆக நிறைவுபெற்றது.
கடந்த இரண்டு வர்த்தக நாட்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.68 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ரூ. 86,743.14 கோடி சரிந்தது, அதன் சந்தை மதிப்பு ரூ. 18 லட்சம் கோடி என்ற அளவிற்குக் கீழே சரிந்து ரூ. 17,65,649.37 கோடியாக உள்ளது.
மத்திய கிழக்கில் தொடர் பதற்றங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலர் என்ற அளவை கடந்ததால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட எரிசக்தித் துறை சார்ந்த பங்குகள் கடும் அழுத்தத்தை எதிர்நோக்கி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஜூபிலியன்ட் ஃபுட்ஒா்க்ஸ் பங்குகள் 10.5% சரிவுடன் நிறைவு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



