குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய், முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கத் தவறியதையடுத்து அதன் பங்குகள் சுமார் 2.5 சதவீதம் சரிந்தன.

News image

TCS and Pearson partner to accelerate AI-powered learning for global industries

Updated On :10 ஏப்ரல் 2026, 9:55 pm IST

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான டிசிஎஸ் - மார்ச் வரை முடிய அதன் காலாண்டு வருவாய், முதலீட்டாளர்களை உற்சாகமளிக்கத் தவறியதையடுத்து, அதன் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில் சுமார் 2.5 சதவீதம் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில், டிசிஎஸ் 2.45 சதவீதம் சரிந்து ரூ. 2,524.35ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் இடையே, நிறுவனத்தின் பங்கு 3.32 சதவீதம் சரிந்து ரூ. 2,501.70 என்ற நிலையை எட்டியது.

நிஃப்டி-யில், டிசிஎஸ் பங்கு 2.49 சதவீதம் சரிந்து ரூ. 2,524.30ஆக நிறைவுபெற்றது. அதே வேளையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 22,938.67 கோடி சரிந்து ரூ. 9,13,331.92 கோடியாக உள்ளது.

மார்ச் முடிய உள்ள காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 12.22 சதவீதம் உயர்ந்து ரூ. 13,718 கோடியாக இருப்பதாக டிசிஎஸ் அறிவித்தது.

2025-26 நிதியாண்டைப் பொறுத்தவரை, வரிக்குப் பிந்தைய லாபம் 1.35 சதவீதம் உயர்ந்து ரூ. 49,210 கோடியாக உள்ளது. இதுவே கடந்த (2024-25) நிதியாண்டில் பதிவான ரூ. 48,553 கோடியுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகம்.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 9.64 சதவீதம் உயர்ந்து ரூ. 70,698 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 64,479 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் முழு நிதியாண்டுக்கான செயல்பாட்டு வருவாய் 4.58 சதவீதம் உயர்ந்து ரூ. 2.67 லட்சம் கோடியாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில்நுட்பக் குறியீடு 1.70 சதவீதம் சரிந்து 29,902.28 புள்ளிகளாக நிலைபெற்றது.டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான டிசிஎஸ் - மார்ச் முடிய அதன் காலாண்டு வருவாய் முடிவானது, முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கத் தவறியதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் சுமார் 2.5 சதவீதம் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில், டிசிஎஸ் 2.45 சதவீதம் சரிந்து ரூ. 2,524.35ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் இடையே, நிறுவனத்தின் பங்கு 3.32 சதவீதம் சரிந்து ரூ. 2,501.70 என்ற நிலையை எட்டியது.

நிஃப்டி-யில், டிசிஎஸ் பங்கு 2.49 சதவீதம் சரிந்து ரூ. 2,524.30ஆக நிறைவுபெற்றது. அதே வேளையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 22,938.67 கோடி சரிந்து ரூ. 9,13,331.92 கோடியாக உள்ளது.

மார்ச் முடிய உள்ள காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 12.22 சதவீதம் உயர்ந்து ரூ. 13,718 கோடியாக இருப்பதாக டிசிஎஸ் அறிவித்தது.

2025-26 நிதியாண்டைப் பொறுத்தவரை, வரிக்குப் பிந்தைய லாபம் 1.35 சதவீதம் உயர்ந்து ரூ. 49,210 கோடியாக உள்ளது. இதுவே கடந்த (2024-25) நிதியாண்டில் பதிவான ரூ. 48,553 கோடியுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகம்.

தற்போதைய காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 9.64 சதவீதம் உயர்ந்து ரூ. 70,698 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 64,479 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் முழு நிதியாண்டுக்கான செயல்பாட்டு வருவாய் 4.58 சதவீதம் உயர்ந்து ரூ. 2.67 லட்சம் கோடியாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பக் குறியீடு 1.70 சதவீதம் சரிந்து 29,902.28 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.