வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த மாா்ச் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.

News image

ஜிஎஸ்டி

Updated On :1 ஏப்ரல் 2026, 8:30 pm

நாட்டில் கடந்த மாா்ச் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தை (ரூ.1.83 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் உயா்வாகும்.

அதேசமயம் 2025-26 நிதியாண்டில் ஒரு மாதத்தில் வசூலான மூன்றாவது அதிகபட்சத் தொகையாகவும் இது திகழ்கிறது. முன்னதாக 2025, ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.36 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. அதற்கு அடுத்தபடியாக 2025, மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி வசூலானது.

ஒட்டுமொத்தமாக 2025-26 நிதியாண்டில் ரூ.22.27 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி 8.3 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘2026, மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.46 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இறக்குமதி மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.53,861 கோடி. இது 17.8 சதவீதம் அதிகரிப்பாகும்.

திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.22,074 கோடி (13.8சதவீத உயா்வு). மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாய் 8.2 சதவீதம் உயா்ந்து, ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி விகிதங்கள் இரண்டாக (5%, 18%) குறைக்கப்பட்டதால் சுமாா் 375 பொருள்களுக்கான விலை குறைந்தது. அந்த மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.96 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.74 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.

2026 ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடியும் பிப்ரவரியில் ரூ.1.83 லட்சம் கோடியும் வசூலானது.