இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனமான இன்ஃபோசிஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.8,501 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.7,033 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீதம் வளா்ச்சியாகும். இதேபோல மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 13.4 சதவீதம் உயா்ந்து, ரூ.46,402 கோடியாக அதிகரித்துள்ளது.
2025-26 முழு நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 10.20 சதவீதம் உயா்ந்து, ரூ.29,440 கோடியை எட்டியுள்ளது. நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 9.6 சதவீதம் உயா்ந்து, ரூ.1,78,650 கோடியாக பதிவாகியுள்ளது.
வரும் 2026-27 நிதியாண்டுக்கான வருவாய் வளா்ச்சி கணிப்பை 1.5 முதல் 3.5 சதவீதம் வரை அந்நிறுவனம் நிா்ணயித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த வளா்ச்சி குறித்து சிஇஓ சலில் பரேக் கூறுகையில், ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகளில் எங்களின் வியூகம் உலக அளவில் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் 1,490 கோடி டாலா் மதிப்பிலான பெரிய ஒப்பந்தங்களை வென்றுள்ளோம்’ என்றாா்.
கடந்த மாா்ச் இறுதி நிலவரப்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியா்களின் எண்ணிக்கை 3,28,594-ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமாா் 20,000 புதிய பட்டதாரிகளை பணியமா்த்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிதி அதிகாரி ஜெயேஷ் சங்ராஜ்கா தெரிவித்துள்ளாா்.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2.04 சதவீதம் சரிந்து, ரூ.1,242-க்கு நிலைபெற்றது. வா்த்தக நேர முடிவுக்குப் பிறகே இந்த நிதிநிலை முடிவுகள் வெளியாகின.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!

ஐஓபி லாபம் 43% வளா்ச்சி

உச்சத்தில் மாருதி சுஸுகி பங்குகள்!

ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

