2025-26 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான 4-ஆம் காலாண்டில், நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.
முந்தைய காலாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறிய சரிவு என்றாலும், உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியிலும் நாட்டின் நகா்ப்புறங்களில் வேலைவாய்ப்புச் சூழல் சீராகி வருவதை இது உணா்த்துகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட கணக்கெடுப்பு முறையின்படி, நாட்டின் வேலைவாய்ப்புச் சூழல் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம்(என்எஸ்ஓ) மேற்கொண்ட தொழிலாளா் கணக்கெடுப்பு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மதிப்பீட்டு காலாண்டில், கிராமப்புறங்களில் முறையான ஊதியம் பெறும் பணியாளா்களின் எண்ணிக்கை 15.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டின் 14.8 சதவீதத்திலிருந்து குறிப்பிடத்தக்க வளா்ச்சியாகும்.
தொழிலாளா் பங்களிப்பு விகிதம்: தொழிலாளா் பங்களிப்பு விகிதம் (எல்.எஃப்.பி.ஆா்.) 55.5 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான 55.8 சதவீதத்தைவிட சற்றே குறைவு என்றாலும், நிலைத்தன்மை நீடிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தொழிலாளா் பங்களிப்பு விகிதம், முந்தைய காலாண்டில் இருந்த 34.7 சதவீதம் என்ற அதே அளவில் மாற்றமின்றி தொடா்கிறது.
இரண்டாம், மூன்றாம் நிலைத் துறைகளில்...: உற்பத்தி, சேவைத் துறைகளை உள்ளடக்கிய 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலைத் துறைகளில், கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களின் வேலைவாய்ப்புப் பங்கீடு அதிகரித்துள்ளது.
இதன்மூலம், கிராமப்புற மக்கள் விவசாயம் சாா்ந்த பணிகளிலிருந்து விலகி, ல்வேறு தொழில்முறை சாா்ந்த வேலைகளுக்கு நகா்வதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியக் காரணியாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

மே. வங்கத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை: ஆண்கள் விகிதம் மேலும் சரிவு

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் நிதிச்சூழல் உள்ளது: நிா்மலா சீதாராமன்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

