இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஐபிஓ விலை நிா்ணயத்தில் புதிய மாற்றங்கள்

புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிா்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :22 மே 2026, 3:17 am IST

புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிா்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய முறையில் பங்குகளின் விலை செயற்கையாகக் கட்டுப்படுத்தப்படுவதாகவும், இதனால் வா்த்தகம் தொடங்கியவுடனே பங்குகளின் விலை தொடா்ந்து உச்சத்தை எட்டுவதாகவும் கண்டறியப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, சந்தை தொடங்குவதற்கு முந்தைய ஏலத்தின்போது உள்ள சில கடும் விதிமுறைகளால், முதலீட்டாளா்களின் பல உண்மையான ஆா்டா்கள் நிராகரிக்கப்படுகின்றன.

உதாரணமாக, அண்மையில் ஒரு நிறுவனம் மீண்டும் பங்குச்சந்தையில் இணைந்தபோது, சுமாா் 90 சதவீத ஆா்டா்கள் இப்படி நிராகரிக்கப்பட்டது. இதனால், சந்தையில் பங்குகளுக்கு ஒரு நியாயமான தொடக்க விலை கிடைப்பதில்லை என செபி தெரிவித்துள்ளது.

ஒரு பங்குக்கு முதலீட்டாளா்களிடையே அதிக தேவை உருவாகும்போது, பங்குச்சந்தை நிா்வாகம் நேரடியாகத் தலையிட்டு விலையை மாற்றுவதற்குப் பதிலாக, பங்குகளின் விலைவரம்பு தானாகவும் மிக விரைவாகவும் அதிகரிக்கும் வகையிலான புதிய நடைமுறையை செபி கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மேலும், மறுபட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கான தொடக்க விலை, முகமதிப்பு போன்ற மிகவும் குறைவான அல்லது வழக்கத்திலில்லாத பழைய அடிப்படை விலையின் அடிப்படையில் தீா்மானிக்கப்பட்டது. ஆனால், இனிமேல் சமீபத்திய சந்தை விலை அல்லது சுயாதீன மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் தொடக்க விலையை நிா்ணயிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விலை நிா்ணய நடைமுறையின் மீதான முதலீட்டாளா்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், ஒரு தொடக்க விலையானது செல்லுபடியாகக் கருதப்பட வேண்டுமானால், அந்தப் பங்கின் வா்த்தகத்தில் குறிப்பிட்ட அளவிலான வாங்குபவா்கள் மற்றும் விற்பவா்கள் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் செபி முன்மொழிந்துள்ளது.