இஸ்லாமாபாத், மே 14 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் முழு ராஜீய உறவை ஏற்படுத்துவதென இரு நாடுகளும் இன்று உடன்பட்டன.
இங்கு நடந்த பேச்சுவார்த்தைகளில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.
வங்கதேசத்தை இந்தியா அங்கீகரித்ததன் தொடர்பாக, 1971 டிசம்பரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையே தூதுவர் உறவ நின்றது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளில், ஒரு நாட்டின் தூதுவர் தனது அணுவலர்களுடன் மற்றொரு நாட்டின் தலைநகரில் தங்கியிருந்து பணியாற்ற இந்த உடன்பாடு வகை செய்கிறது.
கூட்டறிக்கை
இந்திய வெளிநாட்டிலாகா காரியதரிசி ஐகத் எஸ்.மேத்தா தலைமையில் வந்த இந்தியத் தூது கோஷ்டிக்கும், பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையே மூன்று நாட்களாக இங்கு நடந்த பேச்சின் முடிவில் இன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கை இதைத் தெரிவித்தது.
விமானப் போக்குவரத்து தொடங்கும்
ஒரு நாட்டின் மீது மற்றொரு நாட்டு விமானங்கள் அனுமதிப்பதெனவும், இரண்டு நாடுகளுக்குமிடையே விமானப் போக்குவரத்துகளை மீண்டும் ஏற்படுத்துவதெனவும் உடன்பாடு ஏற்பட்டதாகவும் இந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றைச் சிலர் கடத்திச்சென்று பாகிஸ்தானில் லாகூரில் குண்டு வைத்துத் தகர்த்ததையொட்டி இவை நிறுத்தப்பட்டன.
ரயில் போக்குவரத்தும் மீளும்
வாகா - அட்டாரி எல்லை வழியாக கூட்ஸ் ரயில்கள், பிரயாணி ரயில்கள் ஆகியவைகளின் போக்குவரத்தை மீண்டும் ஏற்படுத்துவதென்றும் உடன்பாடு ஏற்பட்டது. ...
தமிழ் நாட்டில் மேலும் 5 திறந்தவெளி சிறைகள்: ஐ. ஜி. தகவல்
சென்னை, மே, 14 - தமிழ் நாட்டில் மேலும் 5 திறந்தவெளி சிறைச்சாலைகள் நிறுவப்படும் என்று மாநில சிறைச்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பரமகுரு கூறினார்.
தற்போது தஞ்சாவூர், சிங்காநல்லூர், சேலத்தில் தலா ஒரு திறந்த வெளி சிறைச்சாலைகள் உள்ளன. இவை வெற்றிகரமாக செயல்படுவதால் மேலும் திறந்த வெளி சிறைச்சாலைகள் துவங்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
நன்கு நடந்து கொள்ளும் நீண்ட கால தண்டனைக் கைதிகள் விடுதலையான பிறகு புனர்வாழ்வு பெறுவதற்கு பயிற்சி அளிப்பதே திறந்த வெளிச் சிறைச்சாலைகளின் நோக்கம் என்றார். ஜில்லாதோறும் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை ஏற்படுத்துவது இறுதி குறிக்கோள் என்றும், தற்போது 5 திறந்த வெளி சிறைச்சாலைக்கு திட்டம் தயாரித்துள்ளதாகவும் மற்ற ஜில்லாக்களில் இது போன்ற சிறைச் சாலைகளுக்கேற்ற இடம் பற்றி பரிசீலிக்கப்படுகிறது என்றும் கூறினார். ...
Summary
May 15, 1976: India and Pakistan to Resume Diplomatic Relations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 கோடி பேர் காப்பாற்றப்பட்டனர்: டிரம்ப்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மீண்டும் தண்டனை குறைப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


