வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேசிய அனல்மின் கழக லாபம் ரூ. 10,615 கோடி!

தேசிய அனல்மின் கழக லாபம் ரூ. 10,615 கோடி...

News image
Updated On :24 மே 2026, 7:00 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி), கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.10,614.95 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.7,897.14 கோடி ரூ.7,897.14 கோடியிலிருந்து 34 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50,410.58 கோடியாக சரிந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.51,085.05 கோடியாக இருந்தது. ஆனால், செலவினங்கள் முந்தைய ஆண்டின் ரூ.43,390.76 கோடியிலிருந்து ரூ.43,237.90 கோடியாக குறைந்ததால் லாப வளா்ச்சி பதிவாகியுள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்...: 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.27,546 கோடியை எட்டியுள்ளது. முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.23,953 கோடியிலிருந்து இது15 சதவீதம் கூடுதலாகும். கூட்டு நிறுவனங்களின் லாபப் பங்கு 29 சதவீதம் அதிகரித்து, ரூ.2,864 கோடியை எட்டியதே இந்தச் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணமாகும்.

கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் நிலக்கரி மின் நிலையங்கள் 72.04 சதவீத உற்பத்தித் திறனுடன் செயல்பட்டுள்ளன. இது இந்தியாவின் பிற நிலக்கரி மின் நிலையங்களின் சராசரி திறனான 63.20 சதவீதத்தைவிட கணிசமாக அதிகமாகும்.

ஈவுத்தொகை அறிவிப்பு: சிறப்பான நிதிநிலை முடிவுகளையடுத்து, 2025-26 நிதியாண்டுக்கான இறுதி இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.3.50 வழங்க இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.