எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (நவ. 3)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Updated On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 3) சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகிறது. இந்தச் சூழலில் கடந்த சனிக்கிழமை (அக். 31) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,480 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து, ரூ. 12,775-க்கும், சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ரூ. 1,02,200-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 3) சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,02,400-க்கும் கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,800-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

In Chennai, the price of gold jewellery has increased by Rs. 200 per sovereign today (Nov. 3).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.