மதுரை நகைக் கடை கொள்ளை: நிஷாந்துக்கு டிச. 1 வரை நீதிமன்றக் காவல்!நவ. 18, 19-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை92,000 விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்துகோவா சா்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ் திரைப்படங்கள்உணவுப் பொருள் விலை அதிகரிப்பு எதிரொலி: கேரளத்தில் ஹோட்டல் தொழில் பாதிப்பு

ஒரு லட்சத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 17)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தங்கம், வெள்ளி விலை - IANS

Updated On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 17) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (நவ.14) கிராமுக்கு 120 குறைந்து, ரூ.12,695-க்கும், சவரன் ரூ. 960 குறைந்து, ரூ.1,01,560-க்கும் விற்பனையானது.

இதனிடையே, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 75 குறைந்து, ரூ. 12,540-க்கும், சவரனுக்கு ரூ. 600 குறைந்து, ரூ. 1,00,320-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 17) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 99,760-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 190-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடந்த 7 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,280 குறைந்துள்ளது. சுமார் 320 நாள்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்துக்கு கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Chennai, the price of gold jewellery has decreased by Rs. 560 per sovereign today (Nov. 17), and it is now being sold at Rs. 99,760.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.