நம்பிக்கையின் குரல்! தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு கௌதம் அதானி வாழ்த்து!
நம்பிக்கையின் குரலாக உருவெடுக்கட்டும் என தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு கௌதம் அதானி வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

கௌதம் அதானி - கோப்புப் படம்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு அதானி குழும நிறுவனர், தொழிலதிபர் கௌதம் அதானி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், புதிய தேசிய வணிக நாளிதழான தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) அறிமுகம் செய்திருக்கிறது.
இதன் மூலம், நாட்டின் வணிகம், சந்தைகள் மற்றும் உலகத்தை வடிவமைக்கும் காரணிகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் இதழியலை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உறுதிப்படுத்துகிறது.
தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) இதழுக்கு அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) இதழைத் தொடங்கியுள்ள 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப் பெரிய அளவிலான ஒரு புதிய வணிக நாளிதழின் தொடக்கம், இந்திய இதழியல் துறைக்கு ஒரு முக்கியமான தருணம். ஊடகச் சூழல் வேகமாக மாற்றமடைந்து வரும் இக்காலகட்டத்தில், ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முக்கிய புதிய நாளிதழ் வெளிவருவது, அச்சு ஊடகத்தின் நீடித்த முக்கியத்துவத்தையும், நம்பகமான இதழியலின் அவசியத்தையும் உறுதிப்படுத்தும் ஒரு வலுவான வெளிப்பாடு.
ஆழமான வாசிப்புப் பழக்கத்தையும், ஈடுபாடு கொண்ட வாசகர் வட்டத்தையும் கொண்ட கேரள மாநிலத்தில், வளமான அறிவுசார் மற்றும் கலாசாரப் பாரம்பரியம் கொண்ட கொச்சி நகரிலிருந்து இந்த முயற்சி உருவெடுப்பது மிகவும் பொருத்தமானது. தென்னிந்தியா நீண்ட காலமாகவே தொழில்முனைவு, புத்தாக்கம் மற்றும் புதிய சிந்தனைகளின் மையமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒரு பிரத்யேக வணிக நாளிதழ், வணிகம், நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த தேசிய அளவிலான விவாதங்களுக்குப் புதிய கண்ணோட்டங்களை வழங்கும்.
இக்குழு எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். இவ்விதழ் வலுவான வாசகர் வட்டத்தை உருவாக்கி, இந்தியாவின் பொருளாதார மற்றும் வணிக விவாதங்களில் நம்பிக்கைக்குரிய குரலாக உருவெடுக்கட்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Summary
Gautam Adani has extended his best wishes to 'The Financial Standard' newspaper, expressing his hope that it will emerge as a voice of confidence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


