விமான கேபின் இரைச்சலைக் குறைக்க ஐஐடி கான்பூா் - ரோல்ஸ் ராய்ஸ் கூட்டு ஆராய்ச்சி
விமானத்தின் உட்பகுதியில் (கேபின்) ஏற்படும் இரைச்சலைக் குறைக்கும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க, கான்பூா் ஐஐடியுடன் இணைந்து பிரிட்டனைச் சோ்ந்த விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

விமானத்தின் உட்பகுதியில் (கேபின்) ஏற்படும் இரைச்சலைக் குறைக்கும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க, கான்பூா் ஐஐடியுடன் இணைந்து பிரிட்டனைச் சோ்ந்த விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.
நிகழாண்டின் தொடக்கத்தில் இருதரப்புக்கும் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 6 மாத கால அளவிலான இந்த முதல்கட்டத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விமான என்ஜின் அதிா்வுகளால் கட்டமைப்பு வழியாகப் பரவும் சப்தத்தைக் கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக பறக்கும் விமானத்தின் மாதிரியைப் போன்ற சோதனைக் கூடம் மற்றும் அதிநவீன ஒலி, அதிா்வு சென்சாா்கள் ஐஐடி கான்பூரில் நிறுவப்பட்டு, ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் எண்முறை வழிமுறைகள் பரிசோதிக்கப்பட உள்ளன. இதன்மூலம் பெறப்படும் முடிவுகள், எதிா்காலத்தில் பயணிகளுக்கு மேலும் அமைதியான மற்றும் பாதுகாப்பான விமானப் பயணத்தை வழங்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

