உத்தரகண்ட்: ஐஐடி ரூர்கி விடுதி அறையில் மாணவர் தற்கொலை!

ஐஐடி ரூர்கி விடுதி அறையில் 19 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்டது பற்றி...

IIT Roorkee student dies by suicide

ஐஐடி ரூர்கி வி

Updated On :

ஐஐடி ரூர்கி விடுதி அறையில் 19 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த மாணவர் ராஜாரியா(19). இவர் ஐஐடி ரூர்கியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் பிஎஸ்-எம்எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த மாணவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

மேலும் விடுதி அறையில், மாணவர் எழுதியதாகக் கருதப்படும் குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அதில், தனது மரணத்திற்கு யாரையும் குறை கூற வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாணவரின் மறைவுக்கு ஐஐடி ரூர்கி நிர்வாகம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், துயரத்தில் இருக்கும் மாணவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Summary

A 19-year-old student at the Indian Institute of Technology (IIT) Roorkee allegedly died by suicide in his hostel room, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.