இரவில் பணிபுரிவோருக்காக... ஏசர் ஆஸ்பியர் லைட் லேப்டாப்!
ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பியர் லைட் மடிக்கணினி சிறப்பம்சங்கள் குறித்து...

ஆஸ்பியர் லைட் - படம் / நன்றி - ஏசர்
ஏசர் நிறுவனம் ஆஸ்பியர் லைட் என்ற புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது.
இரவு நேரத்திலும் எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் ஒளிரும் கீபோர்ட் வசதியுடன் இதனை உருவாக்கியுள்ளது. இதனால் இரவு நேரத்திலும் எந்தவொரு கூடுதல் விளக்குகள் இன்றி பணிபுரியலாம்.
தைவானைத் தலைமையிடமாகக் கொண்ட ஏசர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ஆஸ்பியர் லைட் என்ற மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
13வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 1334 யு புராசஸர் கொண்டது.
15.6 அங்குல முழு எச்.டி. திரை கொண்டது.
விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளம் உடையது.
ஆபீஸ் 2024 மற்றும் மைக்ரோசாஃப்ட் 365 பேசின் வசதிகள் உள்ளடக்கியது.
16 ஜிபி உள்நினைவகம் (RAM), 512 ஜிபி நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.
1.59 கிலோ எடை உடையது.
புறவடிவமைப்பு முழுவதும் உலோகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ. 56,999. அமேசான் இணைய விற்பனை தளத்தில் சலுகை விலையில் ரூ. 44,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Amazon Great Indian Festival 2026 Acer Aspire Lite, AMD Ryzen 3-5400U, 8 GB RAM
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

