ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க இது சிறந்த நேரம்! விழாக்கால அதிரடி சலுகைகள்!
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு விழாக்கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் தயாரிப்புகள் - DNS
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு விழாக்கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆப்பிள் தயாரிப்புகளை பயனர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் விழாக்காலத்தையொட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 18, மேக் புக் ப்ரோவுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், மேக், ஏர்பாட்ஸ் ஆகியவற்றின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
விழாக்கால விற்பனையை அதிகரிப்பதற்காக ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் வாங்குவோருக்கு ரூ. 7,000 கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது.
மேக்புக் ப்ரோ மாடல் மடிக்கணினிகளை வாங்கும் பயனர்களுக்கு ரூ. 15,000 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேக்புக் நியோ மடிக்கணினியின் விலை ரூ. 79,900. தற்போது ரூ. 67,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் ஏர் விலை ரூ. 1,49,900. தற்போது விழாக்கால சலுகையாக ரூ. 1,19,900-க்கு விற்கப்படுகிறது. வங்கி அளிக்கும் சலுகையுடன் சேர்த்து ரூ. 78,953-க்கு இதனை வாங்கலாம்.
ஐபோன் 17 ப்ரோவுக்கு சலுகை அறிவிக்கப்பட்டு ரூ. 94,490-க்கு கொடுக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஃபிளாக்ஷிப் மாடல் ஐபோன் ஏர் உள்ளிட்ட சாதனங்களுக்கும் அதன் விலைக்கு ஏற்ப சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி இணைய விற்பனை தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் க்ரோமா ஆகிய நிறுவனங்களும் தனித்தனியாக சலுகைகளை அறிவித்துள்ளன.
Summary
This is the best time to buy Apple products Massive festive offers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


