அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடி! ரூ. 57,999-க்கு சாம்சங் கேலக்ஸி எஸ் 25!

ரூ. 1,04,999 விலை உடைய சாம்சங் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போன், ரூ. 47,000 சலுகையுடன் ரூ. 57,999-க்கு விற்பனையாவது குறித்து...

சாம்சங் கேலக்ஸி எஸ் 25 சிறப்புச் சலுகை - இன்ஸ்டாகிராம்

Published On :

சாம்சங் நிறுவனத்தில் அதிக பயனர்களால் கவனம் ஈர்க்கப்பட்ட கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் மேல் விலையுடைய இந்த ஸ்மார்ட்போனை ரூ. 57,999-க்கு சலுகை விலையில் பெறலாம். ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனுக்கான சலுகையை வெறும் அறிவிப்பாக மட்டுமின்றி, அனைத்து மக்களிடமும் கொண்டுசெல்லும் வகையில் நடிகை தமன்னாவை ஃபிளிப்கார்ட் நிறுவனம், விளம்பர தூதுவராக பயன்படுத்தியுள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் விளம்பர தூதுவராக உள்ள நடிகை தமன்னா, கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போன் சலுகை விலை விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 25 சிறப்புச் சலுகை  விளம்பரத்தில் தமன்னா

சாம்சங் கேலக்ஸி எஸ் 25 சிறப்புச் சலுகை விளம்பரத்தில் தமன்னா - இன்ஸ்டாகிராம்

விழாக்காலங்களில் வழக்கமாக அறிவிக்கப்படும் சலுகையாக அல்லாமல், அதிக தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதால், மக்களிடம் இதனைக் கொண்டு செல்வதற்காக இதனை பிரசாரமாக மேற்கொள்ள ஃபிளிப்கார்ட் இவ்வாறு திட்டமிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அறிமுகப்படுத்தப்படும்போது இதன் விலை ரூ. 1,04,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது பிக்பில்லியன் சலுகையாக ரூ.57,999க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் ரூ. 47,000 வரை பயனர்களால் சேமிக்க முடியும்.

இச்சலுகை முடியும் கால வரம்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Flipkart big billion Massive discount of Rs. 47,000 Samsung Galaxy S25 offer ptice Rs. 57,999

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.