திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

ரூ. 52,914-க்கு சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன்! ஃபிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை!

சாம்சங் நிறுவனத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து...

Samsung Galaxy S25 smartphone

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் - படம் / நன்றி - சாம்சங்

Updated On :

சாம்சங் நிறுவனத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போன் ரூ. 52,914-க்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுமட்டுமின்றி கூடுதலாக வங்கிக் கடன் அட்டைகள் மற்றும் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும்போது கூடுதலாக ரூ. 34,300 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ. 1,09,999. 12GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய டைட்டானியம் ஜெட்பிளாக் விலை ரூ. 89,999.

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் ரூ. 89,999-க்கு சாம்சங் கேலக்ஸி எஸ் 25 வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ. 2,785 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதிகபட்சமாக ரூ. 34,300 வரை சலுகை வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை மாற்றினால், இந்த அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும்.

இதுமட்டுமின்றி மாதம் ரூ. 19,095 தவணை முறை சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சலுகைகள் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனை ரூ. 52,914-க்கு வாடிக்கையாளர்களால் பெற முடியும்.

பண்டிகை கால தள்ளுபடி முடிந்த பிறகும் ஃபிளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Samsung Galaxy S25 smartphone for Rs. 52,914 Sensational offer on Flipkart

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.