மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!பிள்ளைகள் 18 வயதை எட்டுகிறார்களா? அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!உங்களுக்குத் தேவை மசாலா! சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு தவெக அளித்த பதில்!பிலிப்பின்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!புழல் சிறையில் அன்பில் மகேஸை மீண்டும் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்! தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? பிரபல பெண் ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு!ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!

தீபாவளிக்குப் பிறகு சாம்சங், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களின் விலை 19% உயர்வு!

சாம்சங், ஷாவ்மியில் 41 வகையான மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து...

smart phones

சாம்சங் / ஷாவ்மி ஸ்மார்ட்போன்கள் - எக்ஸ்

Updated On :

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சாம்சங், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களின் விலை 19% உயர்ந்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களிலும் சேர்த்து 41 வகையான மாடல்களின் விலை அதிகரித்துள்ளது. பண்டிகையையொட்டி எழுந்த தேவை அதிகரிப்பின் காரணமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திருத்தப்பட்ட விலையேற்றம் இன்று (நவ. 16) முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸியில் ஏ மற்றும் எஃப் வரிசை மற்றும் ஷாவ்மியில் 19 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 முதல் ரூ. 4000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களின் மாடல் மற்றும் நினைவகத் திறன் ஆகியவற்றைப் பொருத்து விலையேற்றம் மாறுபடுகிறது.

இதுதவிர ஓப்போ, விவோ, ரியல்மி ஆகிய நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றத்தால் ஆரம்ப நிலை மற்றும் மத்திய தர விலையிலுள்ள ஸ்மார்ட்போன்களை நடுத்தர மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சாம்சங்கில் குறிப்பாக 3.13% முதல் 9.52% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஷாவ்மியில் 4.26% முதல் 18.7% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சாம்சங்கில் கேலக்ஸி ஏ07, கேலக்ஸி எஃப் 17, ஏ 17, ஏ 57, ஏ 36, ஏ 56, ஏ 37 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Summary

Prices of Samsung and Xiaomi smartphones to rise by 19% after Diwali!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER